ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து
வியாழக்கிழமை மாலை 4.56 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 27 மணி நேர கவுண்ட்டவுன் புதன்கிழமை மதியம் 1.56 மணிக்கு தொடங்கவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டது. எரிப்பொருள் நிரப்பும் பணியும் புதன்கிழமை பிற்பகலில் முடிவடைந்துவிடும் இதற்கடுத்தப்படியாக மதியம் 1.56 மணி ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. எஃப்08 ராக்கெட்டின் மொத்தம் உயரம் 49.1 மீட்டரும், அதன் எடை 415.6 டன்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.