டெக்

ஜிசாட் 19 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

ஜிசாட் 19 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

Rasus

ஜிசாட்-19 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து இன்று 5.28-க்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இதற்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று பிற்பகல் 3.58 மணிக்கு துவங்கியது. இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3,136 கிலோ எடை கொண்ட இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் சென்றது. இந்த செயற்கைக் கோள் மூலம் இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்த முடியும். 

ஜிஎஸ்எல்வி மார்க் 3, 300 கோடி ரூபாய் செலவில், 15 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது. எதிர்காலத்தில், இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக இந்திய விண்வெளி நிபுணர்களை விண்ணிற்கு அழைத்துச் செல்ல முடியும். இந்தத் திட்டத்திற்காக இஸ்ரோ மத்திய அரசிடமிருந்து 12,500 கோடியை கேட்கவுள்ளது . மத்திய அரசு, இதற்கு ஒப்புதல் அளித்தால், இஸ்ரோ 7 வருடங்கள் கழித்து இந்திய விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பும்.