டெக்

ஜியோமி எம்ஐ பிரவுசர் உட்பட 47 சீன செயலிகளுக்கு தடை?

ஜியோமி எம்ஐ பிரவுசர் உட்பட 47 சீன செயலிகளுக்கு தடை?

webteam

ஜியோமி எம்ஐ பிரவுசர் உட்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சீனாவிற்கு எதிராக பல்வேறு முடிவுகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக், யுசி பிரவுசர், ட்ரூ காலர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்தியாவின் சில செயலிகளுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சியோமி எம்ஐ பிரவுசர், பாய்டு சர்ஜ்ஸ் உள்ளிட்ட 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ஜியோமி தரப்பு, சூழ்நிலை குறித்து புரிந்துகொள்ள முயலுவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.