டெக்

கூகுள் அசிஸ்டண்ட் மூலம் திருடப்படும் சுயத்தகவல்கள் 

கூகுள் அசிஸ்டண்ட் மூலம் திருடப்படும் சுயத்தகவல்கள் 

webteam

கூகுள் அசிஸ்டண்ட் வசதியை பயன்படுத்துபவரின் தகவல்கள் மற்றும் உரையாடல்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவோ அல்லது கூகுள் ஹோம் போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலமாகவோ திருடப்படுவது தெரியவந்துள்ளது.

தொழில்நுட்பங்கள் இல்லாமல் ஒரு நாளைக் கடப்பது என்பது இன்றைய தேதிக்கு கடினமான ஒன்று. தொழில்நுட்பங்கள் ஒருபுறம் பெருகி வருகிறது என்றாலும் அதன் மூலம் பல சிக்கல்கள் உண்டாகி வருவதும் உண்மை. தொழில்நுட்பங்கள் மூலமாக நம்முடைய சுயத்தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அது சரிதான் என்பது போல தற்போது கூகுள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் வசதியை பயன்படுத்துபவரின் தகவல்கள் மற்றும் உரையாடல்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவோ அல்லது கூகுள் ஹோம் போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலமாகவோ திருடப்படுவது தெரியவந்துள்ளது

பயனர்கள் அலாரம் செட் செய்வது முதல் வானிலை விவரம், செய்திகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என எல்லாவற்றையும் இயக்க வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்கள் குரல் பதிவு மூலம் கேட்கும் அனைத்து கேள்விகள் மற்றும் அதற்கான பதில் உள்ளிட்டவற்றை கூகுள் சேமித்துக் கொள்ளும். 

இதன்மூலம் பயனர்களின் சில அந்தரங்க தகவல்கள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களை கூகுளின் அசிஸ்டண்ட் சேவையில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களால் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கூகுள் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தத் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.