டெக்

என்னென்ன வசதிகள்?: நாளை விற்பனைக்கு வருகிறது கூகுளின் பிக்சல் 4ஏ !!

என்னென்ன வசதிகள்?: நாளை விற்பனைக்கு வருகிறது கூகுளின் பிக்சல் 4ஏ !!

EllusamyKarthik

கூகுள் பிக்சல் 4ஏ மொபைல் போன் நாளை முதல் விற்பனைக்கு வர உள்ளது. கடந்த மே மாதமே பிக்சல் 4ஏ போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா நெருக்கடியினால் அது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ள பிக்சல் போன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிடைக்கும் என தெரிவித்தது. இருந்தாலும் அது என்ன ரக போன் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது கூகுள். 

பிக்சல் 4ஏ ரக போன் ஹோல் - பஞ்ச் டிஸ்ப்ளேவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடிய 3080 மில்லியாம்ப் திறன் கொண்ட ‘லாங் லாஸ்டிங்’ பேட்டரியை பிக்சல் 4ஏ கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆண்ட்ராய்ட் 10 ஓ.எஸ்-இல் இயங்கும் இந்த போனில் 12.2 மெகா பிக்சலில் ரியர் கேமிராவில் படம் பிடிக்கலாம். 

5.8 இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட இந்த போனில் ஸ்னாப்டிராகன் 730 SoC, 6 ஜிபி ரேம் மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியும் உள்ளது.   

அதிவேகமான நெட்வொர்க் இணைப்புக்காக இந்த போன் 5ஜி மாடலாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாது பிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் இதில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. 6ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலுக்கு தோராயமாக இந்திய மதிப்பில் 22,400 ரூபாயும், 6ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் மெமரி மாடலுக்கு 26,100 ரூபாய் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.  ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த போனை ஆர்டர் செய்ய முடியும்.