டெக்

இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகுள்: ஆய்வில் தகவல்

இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகுள்: ஆய்வில் தகவல்

webteam

இந்தியாவின் நம்பகமான பிராண்டாக கூகுள் திகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. 

 இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த கோன் அண்ட் உல்ஃப் (Cohn & Wolfe) என்ற நிறுவனம் நம்பகமான பிராண்ட் பற்றி ஆய்வு நடத்தியது. பிரேசில், கனடா, பிரான்ஸ், சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 1400 பிராண்ட் பற்றி, 15 ஆயிரம் பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கூகுள் நம்பகமான பிராண்ட் என்று தெரியவந்துள்ளது. இணையத்தில் கூகுள் தேடு பொறியையே இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர்.

மைக்ரோசஃப்ட், அமேசான், மாருதி சுசுகி, ஆப்பிள் ஆகியவை கூகுளுக்கு அடுத்த நம்பகமான பிராண்டுகளாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நுகர்வோரில் 67 சதவிகிதம் பேர் பிராண்டின் நம்பகத்தன்மை அடிப்படையிலேயே பொருளை தேர்வு செய்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.