டெக்

கொரோனா பாதிப்பு பகுதிகளைக் காட்டும் கூகுள் மேப் : புதிய அப்டேட்..!

கொரோனா பாதிப்பு பகுதிகளைக் காட்டும் கூகுள் மேப் : புதிய அப்டேட்..!

webteam

கொரோனா பாதிப்பு பகுதிகளைச் சுட்டிக்காட்டும் புதிய அப்டேட்டை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் முயற்சியாக கூகுள் நிறுவனம் தங்கள் தரப்பிலிருந்து புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதி, கொரோனா பாதிப்பு இருக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும்.

அத்துடன் கொரோனா நேரத்தில் இயக்கப்படும் ரயில்களில் உள்ள கூட்டம் மற்றும் ரயில்களின் நேரம், பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். இந்த அப்டேட் தற்போது இந்தியா, அர்ஜெண்டினா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுதவிர கொரோனா எல்லைகள் மற்றும் அங்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகள், மாநில மற்றும் தேசிய எல்லைகளில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் குறித்தும் அறிந்துகொள்ளக்கூடிய வசதியையும் கூகுள் அப்டேட் செய்துள்ளது. ஆனால் இந்த அப்டேட் தற்போது கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.