ஜெமினி pt web
டெக்

அதென்னப்பா கூகுள் ஜெமினி? சுந்தர் பிச்சை வேலைக்கே கோளாறு ஏற்படுத்திய செயலி...

இணையதள உலகில் புதிய வரவாக அறிமுகம் ஆகியிருக்கிறது கூகுள் ஜெமினி.... ARTIFICIAL INTELLIGENCE என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜெமினியின் சிறப்புகள் என்ன பார்க்கலாம்?

PT WEB

செய்தியாளர் - தினேஷ்குமார்

அனுபவமே சிக்கலைத் தீர்க்கும்

அனுபவம்... ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் அவசியமானது. சுத்தியலை வைத்து ரெண்டு தட்டு தட்டிவிட்டு அதற்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பணியாளர் ஒருவர் பெற்ற கதை சமூகவலைதளங்களில் ரொம்பவே பிரபலம்.

அதிகம் ஃபார்வர்ட் செய்யப்பட்ட அந்த கதையை நிறைய பேர் படித்திருப்போம். வேலை சிறியது என்றாலும், கப்பல் இயங்குவதற்கு எது தடையாக இருக்கிறது என்பதை 2 நிமிடத்தில் கண்டறிய 20 ஆண்டு அனுபவத்தை பயன்படுத்தி சிக்கலை தீர்த்திருப்பார் அந்த பணியாளர். அந்த அனுபவத்திற்குதான் அந்த கட்டணம் என கதை முடிந்திருக்கும்.

யதார்த்த வாழ்க்கைக்கும் இந்த கதை கச்சிதமாக பொருந்தும். பிரச்னைக்கு தீர்வு தேட, வீட்டில் இருக்கும் பெரியவர்களை அணுகுவதுதான் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. இப்போது அதிலும் மாற்றங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன.

கூகுள் ஆண்டவர் இருக்கிறார்

உள்ளங்கை அளவில் உலகம் சுருங்கிவிட்டபடியால், கையடக்க கருவியான மொபைலிலேயே அனைத்திற்கும் விடை காணும் வழக்கம் UNIVERSAL HABIT ஆகி இருக்கிறது. எல்லாத்துக்கும் கூகுள் ஆண்டவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை பரவலாக வளரத் தொடங்கி இருக்கிறது.

மக்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கைக்கு கூகுள் உண்மையிலேயே தகுதி பெற்றதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பல நேரங்களில் ITS AN HUMAN ERROR... என்ற கூற்று கூகுள் விஷயத்திலும் பலித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி, தேடும் கேள்விகளுக்கு விடை அளிக்க கூகுள் உருவாக்கிய ஜெமினி, ஆரம்பத்தில் சறுக்கலையே சந்தித்தது.

உருவானது ஜெமினி

எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தவறான பதிலையே கூகுள் ஜெமினி வழங்கியதால், அந்த தொழில்நுட்ப கோளாறு. கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையின் வேலைக்கும் கோளாறை ஏற்படுத்தியது. ஜெமினிக்காக பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவை கலைத்து விடும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஆனாலும், சுந்தர் பிச்சை மட்டும் மனம் தளரவில்லை. ஜெமினி ஹிட் அடிப்பதற்காக பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். இந்த முறை அப்டேட்டில் சர்ச்சை வரக்கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தப்பட்டது.

கூகுள் சுந்தர் பிச்சை

கூகுள் ASSISTANT-க்கு மாற்றாக உருவெடுத்தது ஜெமினி. மின்னஞ்சல்கள், இடுகைகள், அலாரம், டைமர், நினைவூட்டலை அமைப்பது என டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. கூகுள் ஜெமினியை மொபைலில் டவுன்லோடு செய்தவுடன் நமக்கு ஆரம்பத்திலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம் தமிழிலேயே ஜெமினியுடன் உரையாட முடியும். தரவுகளை தமிழில் கேட்டு பெற முடியும்.

துல்லிய தகவல்களுக்கு திணறும் ஜெமினி

அடிக்கடி அப்டேட் செய்யப்படும் செயலி என்பதால், மருத்துவம், சட்டம், நிதிநிலை போன்ற PROFESSIONAL-ஆன விஷயங்களுக்கு தற்போதைக்கு அணுக வேண்டாம் என்ற DISCLAIMER-ம் ஜெமினி செயலியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய வரவாக இருந்தாலும் வழக்கமான கூகுள் ASSISTANT வேலையைதான் ஜெமினியும் செய்வதாக சொல்கிறார்கள் பயனாளர்கள். AI தொழில்நுட்பம் புகுத்தப்பட்டாலும் துல்லியமான தகவல்களை தர ஜெமினி திணறவே செய்கிறது. தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதே அந்த திணறலுக்கு காரணம் என்பதையும் கூகுள் தெளிவுபடுத்தி இருக்கிறது.

தங்கமும் மின்னும்... சூரிய ஒளியும் மின்னும்... இங்கே எதை எளிதாக பயன்படுத்த முடியும் என்பதே கேள்வி.! அந்த வகையில் கூகுள் ஜெமினி தங்கமாக மின்னினாலும்... முன்னோர்களின் அனுபவம் சூரிய ஒளி போல தகதகவென்றே ஜொலிக்கிறது.