டெக்

கூகிள் டூடுலில் ஆசிரியர் தினம்

கூகிள் டூடுலில் ஆசிரியர் தினம்

webteam

ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதமாக, கூகுள் டூடுல் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளது

இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆசிரியர் சிறப்பு தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை உருவாக்கி, தனது முகப்பை அலங்கரித்துள்ளது.

அதில், G,O,O,L,E ஆகிய எழுத்துகள் மாணவர்கள் போன்றும், இரண்டாவதாக உள்ள G எழுத்து ஆசிரியர் போன்றும் வடிமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவியல், சுற்றுச்சூழல், கணிதம், இசை, புவியியல் அகியவற்றைக் கற்பிப்பது போன்று கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1888-ம் ஆண்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.