டெக்

வாட்ஸ்அப்-க்கு போட்டியாக கூகுள் அல்லோ ஆப்: இப்போது டெஸ்க்டாப்பிலும்...!

வாட்ஸ்அப்-க்கு போட்டியாக கூகுள் அல்லோ ஆப்: இப்போது டெஸ்க்டாப்பிலும்...!

webteam

கூகுள் நிறுவனத்தின் அல்லோ ஆப் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சாட்டிங் செயலிகளை பின்னுக்கு தள்ள கூகுள் நிறுவனம் அல்லோ எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. அல்லோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 5 மில்லியன் டவுன்லோடுகளை கடந்து தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது.

இந்நிலையில், கூகுள் அல்லோ செயலியில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையும் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் கூகுள் தேடல் மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகளை ஒரே செயலியில் பெற முடியும். அதுமட்டுமின்றி இதில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால் இதில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்ஸ் தான். அல்லோ ஆப்பில் தகவல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஷேர் செய்யமுடியும்.

கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் அல்லோ ஆப்பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது. சோதனைகள் முடிவடைந்து தற்போது டெஸ்க்டாப்பில் கூகுள் ஆப் பயன்படுத்துவது நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. வாட்ஸ்ஆப் போன்று ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி கூகுள் ஆப்பை டெஸ்க்டாப்பில் செயல்படுத்த முடியும். விரைவில் இந்த திட்டம் ஐஓஎஸ் மொபைலுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஃபோனில் உள்ள அல்லோ ஆப்பை ஓபன் செய்து, அதில் உள்ள Allo for web என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் குரோம் பிரவுசரில் allo.google.com/web என்ற இணையதளத்தில் இந்த ஆப்பை கியூ ஆா் கோடினை ஸ்கேன் செய்து இணைத்து கொள்ளலாம்.