மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து, இறங்கிய பங்கு சந்தையானது, மீண்டும் சூடு பிடித்துள்ளது. நீண்ட கால பங்குகளின் மீதான வரியை மத்திய அரசு அதிகரித்திருந்ததால், பங்கு சந்தையானது வீழ்ச்சியை கண்டிருந்தது. இருப்பினும், பங்கு சந்தையின் புள்ளிகள் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, தேசிய பங்கு சந்தையானது நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 24950 க்கும் மும்பை பங்கு சந்தையானது 400 புள்ளிகள் உயர்ந்து 81750 க்கும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதே போல் இன்று வங்கி வர்த்தக பங்குகள் அதிகரித்து காணப்படுகிறது.
அதே போல் gujgas, ramco cem, gicre, indiamart, MFSL, TVSMOTOR, HINDCOPPER, BHARTFORG இந்த பங்குகளை வாங்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இன்றைய ஆபரண தங்கத்தின் விலையானது கிராம் ரூபாய் 50 குறைந்து 6415 க்கும் ஒரு சவரன் 51320 க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 55 குறைந்து ரூ.6998க்கும் சவரன் ரூ55984 க்கு விற்பனையாகிறது.