டெக்

‘பீதி’ ஆவதை கண்டுபிடிக்கும் ஆப்பிள் வாட்ச் 

‘பீதி’ ஆவதை கண்டுபிடிக்கும் ஆப்பிள் வாட்ச் 

webteam
ஒருவர் பீதியடைவதைக் கண்டறியும்படி புதிய கடிகாரம் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வருங்காலங்களில் வெளியிட உள்ளது.
 
கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் உலகில் ஆப்பிள் நிறுவனம் அசைக்க முடியாத இடத்தை சந்தையில் பெற்றுள்ளது. இதன் தயாரிப்புகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பும் உள்ளது.  
 
 
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் எதிர்காலத்தில் தயாரிக்க உள்ள கடிகாரத்தில் உயிர்காக்கும் சில தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.  இந்த நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மேக்ஸ் வெயின்பாக், ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆப்பிள் கடிகாரம் பீதி தரக்கூடிய தாக்குதல்களின் போது ஒருவர் எப்படி அதனை எதிர் கொள்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்ப அம்சம் ஆப்பிள் நிறுவன கடிகாரத்தில் எதிர்காலத்தில் சேர்க்கப்பட உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் இதைக் கொண்டு ஒரு பயனாளி மன அழுத்தத்தில் இருப்பதைக்கூடக் கண்டறிய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
 
பொதுவாகப் பீதி தாக்குதலுக்கு முன்னும் பின்னும் சில அறிகுறிகள் ஏற்படுகின்றன என்பதைக் கடிகாரம் மூலம் காலப்போக்கில் அறிய வேண்டும். இறுதியில், பீதி தாக்குதல்கள் நிகழ்வதற்கு முன் அவற்றைக் கண்டறிந்து, அதனைப் பயனருக்கு முன்பே எச்சரிப்பது மற்றும் உதவியை வழங்குவது (சுவாச பயிற்சிகள் போன்றவை) இதன் முக்கிய குறிக்கோள் ஆகும் ”என்று மேக்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 
 
“அதிகப்படியாக இதயம் துடிப்பதைக் கடிகாரம் அறிவிப்பதைப் போலவே, பீதி தாக்குதலின் போது ஒரு பயனர் எவ்வாறு அஞ்சி இருக்கிறார் என்பதற்கான கடந்தகால வரலாற்றை இதில் காண முடியும். அப்போது அவர் எப்படி  நடந்துகொண்டார் என்பதைப் பார்க்கவும் முடியும். இந்த வசதியைக் கடிகாரத்திற்குள் கொண்டு வருவது தொடர்பாகக் கலந்துரையாடல் சென்று கொண்டுள்ளது. ஆகவே உடனே அது ஆப்பிள் கடிகாரத்தில் வெளியாகாது. இன்னும் 2 ஆண்டுகள் வரை இதற்கான திட்டம் செல்லும். அதன் பிறகு எதிர்பார்க்கலாம்” என்று மேக்ஸ் வெயின்பாக் கூறியுள்ளார்.