டெக்

2021ல் இந்தியாவில் இணைய பயன்பாடு எப்படி இருக்கும்?

2021ல் இந்தியாவில் இணைய பயன்பாடு எப்படி இருக்கும்?

webteam

இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் 2021ல் இந்தியாவில் இணைய பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை சிஸ்கோ எனும் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


 
அதன்படி, 2016ல் 373 மில்லியனாக இருக்கும் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 829 மில்லியனாக மாறும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது. அதேபோல 2016ம் ஆண்டு கணக்கீடின் படி ஒவ்வொரு ஐபி முகவரியிலிருந்தும் ஒரு ஜிபி அளவிலான டேட்டா பயன்பாடு இருந்ததாகவும், இந்த பயன்பாடு 5 ஜிபியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2016ல் 6.6 எம்பிபிஎஸ்-ஆக (MBPS) இருந்த இணைய வேகம், 2021ம் ஆண்டில் 2.8 மடங்கு அதிகரித்து 18.2 எம்பிபிஎஸ்-ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2016ல் ஒவ்வொரு மாதமும் 265 எம்பியாக (MB) இருந்த தனிநபர் செல்போன் இணைய பயன்பாடு 2021ல் 7 மடங்கு உயர்ந்து 1.54 ஜிபியாக (GB) இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2016ல் 57 சதவீதமாக இருந்த வீடியோ பதிவுகளைக் கண்டுகளிக்கும் இணைய டிராஃபிக், 2021ல் 76 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.