டெக்

வருகிறது ஃபேஸ்புக் மெசேஜ் ஆப்: இது டீன்ஏஜ் பசங்களுக்கு!

வருகிறது ஃபேஸ்புக் மெசேஜ் ஆப்: இது டீன்ஏஜ் பசங்களுக்கு!

webteam

டீன்ஏஜ் சிறுவர்கள் மேசேஜ் செய்வதற்காக ஃபேஸ்புக் புதிய ஆப்-ஐ கொண்டுவருகிறது.

சிறுவர்கள் ஆன்லைன் மேசேஜ் மூலம் தவறான நபர்களிடம் பழகி வாழ்க்கையே வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து சிறுவர்களைப் பாதுக்காக்க ‘டாக்’ என்ற புதிய ஆப் வெளிவர உள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் டீன்ஏஜ் பிள்ளைகள் யாருடன் பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்பதை அவர்கள் கண்காணிக்க முடியும். இதை அனைவரும் பயன்படுத்த முடியாது. யாராவது தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது இதன்மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள் என்றால் தானாக அந்த ஆப் செயல் இழந்துவிடும். மேலும், இந்த செயலியைப் பயன்படுத்த பேஸ்புக் பக்கம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 13 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.