டெக்

தகவல்கள் திருடப்பட்ட விவகாரம்: ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம்

தகவல்கள் திருடப்பட்ட விவகாரம்: ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம்

webteam

விதிகளை மீறி தனிநபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம், சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. 

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு பகிர்வதில்லை என 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கு எதிராக ஃபேஸ்புக் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த அபராதம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் இருந்து கணக்கிடப்பட்டு, அதில் 9 சதவிகித வருவாயை அபராதமாக விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.