டெக்

இலவச வைஃபை எங்க இருக்கு?: இதோ ஃபேஸ்புக்கே சொல்லுது...!

இலவச வைஃபை எங்க இருக்கு?: இதோ ஃபேஸ்புக்கே சொல்லுது...!

webteam

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் தற்போது சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ளது. பயனாளர்களை தன்வசப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அப்டேட் செய்து வருகிறது.

நாம் வெளியில் பயணம் செய்யும்போது ஆங்காங்கே உள்ள இலவசமாக வைஃபை வசதி எங்கெல்லாம் கிடைக்கும் என்ற தகவல்களை அறியும் வசதியைஃபேஸ்புக் நிறுவனம் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியை உலகம் முழுவதும் நீட்டிக்க உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஃபோன் வைத்திருக்கும் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால், மொபைலில் ஃபேஸ்புக் செயலியை ஆன் செய்து அதில் வைஃபை செட்டிங்கை ஆன் செய்ய வேண்டும்.

வைஃபை செட்டிங்கை ஆன் செய்தவுடன் தற்போது உங்களுக்கு எங்கெங்கு இலவச வைஃபை கிடைக்கின்றது என்பது மேப் மூலம் தெரிய வரும். ஒவ்வொரு முறை ஃபேஸ்புக் செயலியை அப்டேட் செய்யும்போதும் வைஃபை வசதி குறித்த தகவல்கள் நீங்கள் பயன்படுத்தும் ஃபோனுக்கோ, ஐபேடுக்கோ வந்துவிடும். இதன் மூலம் நாம் எங்கிருந்தாலும் வைஃபை வசதி மூலம் டேட்டா சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.