டெக்

நியூஸ் ஃபீடில் நேரடியாக இன்ஸ்டா ஸ்டோரி... சோதனை செய்யும் ஃபேஸ்புக்

நியூஸ் ஃபீடில் நேரடியாக இன்ஸ்டா ஸ்டோரி... சோதனை செய்யும் ஃபேஸ்புக்

EllusamyKarthik

இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்படும் ஸ்டோரிகளை நேரடியாக ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீடில் பார்க்கும் வகையிலான பியூச்சரை  ஃபேஸ்புக் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. 

இந்த வசதி ஃபேஸ்புக் பக்கத்தில் தற்போது இருந்தாலும் அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததா அல்லது  ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததா என்ற தெளிவு இல்லாத நிலையில் அதை அடையாளம் காணும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் மூலம்  ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் பிங்க் அல்லது ஆரஞ்சு நிறத்தில் வட்டமிடப்பட்டுள்ள ஸ்டோரி இன்ஸ்டாகிரம் என்றும், நீல நிறத்தில் வட்டமிடப்பட்டுள்ள ஸ்டோரி  ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது என்றும் பயனர்கள் அடையாளம் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இன்ஸடாவில் பகிரப்பட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பாகும் ஸ்டோரிகளை இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் மட்டுமே பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பயனர்களின் பிரைவஸிக்கு  எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும், பயனர்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம் எனவும்  ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.