டெக்

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு தெரியாமலேயே கேமராவை கையாளும் ஃபேஸ்புக்: நீதிமன்றத்தில் வழக்கு

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு தெரியாமலேயே கேமராவை கையாளும் ஃபேஸ்புக்: நீதிமன்றத்தில் வழக்கு

webteam

இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களின் கேமராவை ஃபேஸ்புக் உபயோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

உலகின் மிக அதிக பயன்பாட்டாளர்களைக் கொண்ட சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிப்பது ஃபேஸ்புக். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கும் உரிமையாளர். இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களின் கேமராக்கள் உபயோகிக்கப்படுவதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ‘ஐஓஎஸ் 14 பீட்டா’ என்ற புதிய அப்டேட்டை வழங்கியிருக்கிறது. இந்த அப்டேட் மூலம் ஆக்டிவாக இல்லாத செயலிகளில் கேமராக்கள் இயக்கப்படுவதை அறியமுடியும். அதன்படி, இன்ஸ்டாகிராம் செயலி ஆக்டிவாக இல்லாத போது, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் கேமராக்களை ஃபேஸ்புக் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. வியாபார நோக்கங்களுக்காக ஃபேஸ்புக் கேமராவை பயன்படுத்தியதும் அறியப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்கள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.