டெக்

ஸ்டேட்டஸில் விளம்பரம் வைக்கும் முயற்சியை கைவிடுகிறது ‘வாட்ஸ் அப்’

webteam

செல்போன் மெசேஜ் செயலியான வாட்ஸ் அப் தனது விளம்பர முயற்சி ஒன்றை கைவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் இந்தச் செயலி, பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் மேலும் பல மாற்றங்களும், அப்டேட்களும் வாட்ஸ்அப்-ல் கொண்டு வரப்பட்டன.

கடந்த 2018ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது. அதன்படி, வாட்ஸ் அப்-ல் ஆன்லைன் விளம்பரங்கள் வெளியாகும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த விளம்பரங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களின் இடையே வரும் எனப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது விளம்பர முடிவை கைவிட்டிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

அத்துடன் ஸ்டேட்டஸில் விளம்பரம் வைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவும் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்ற வகையிலும், வாட்ஸ் அப் செயலியை தயாரித்த ஜன் கோம் மற்றும் பிரைன் ஆகியோரின் பதவி விலகும் முடிவாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.