இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் ஸ்மார்டாக மாறி வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்வாட்ச் கருவிகள் தவிர்க்க முடியாது ஒன்று. கால நேரத்தை காட்டும் கருவியாக மட்டும் இல்லாமல் உடலின் கலோரிகள், இதயத் துடிப்பு மாதிரியானவற்றை கணிக்க உதவுகிறது இந்த ஸ்மார்ட் வாட்ச். இந்நிலையில் இரண்டு கேமிராக்களுடன் ஸ்மார்ட்வாட்சை பேஸ்புக் அறிமுக செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வாட்ச்சில் பிராண்ட் மற்றும் ரியர் கேமிரா இருப்பதாகவும், வாட்ச்சிலிருந்து செய்திகளை அனுப்பவும், பெறவும் முடியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த வாட்ச் மூலம் எடுக்கப்படும் படங்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரடியாக இந்த கருவியின் மூலமே பகிரும் வசதிகளும் இருக்கும் என தெரிகிறது.
மேலும் LTE கனெக்ட்டிவிட்டியும் இதில் இடம்பெற செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறதாம். ரியர் கேமிரா ஃபுல் HD-யாக இருக்குமாம். ஸ்மார்ட்போன்களை போல ஸ்மார்ட்வாட்ச்களையும் அதிகளவில் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம். இதனை THE VERGE பத்திரிகை தெரிவித்துள்ளது. வரும் 2022இல் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகும் என தெரிகிறது.