TESS- சாட்லைட் நாசா
டெக்

அறிவோம் அறிவியல் 14 | ’TOI-6255 b’ ’HD 118203 c’ - TESS சாட்டிலைட் கண்டுபிடித்த எக்ஸோப்ளானெட்டுகள்!

அறிவோம் அறிவியலில் எக்ஸோ ப்ளானட் வகைகள் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று மெல்லும் சில எக்ஸோப்ளானெட் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

Jayashree A

தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...

அறிவோம் அறிவியலில் எக்ஸோப்ளானெட் வகைகள் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று மேலும் சில எக்ஸோப்ளானெட் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம், M வகை நட்சத்திரமானது சிவப்பு குள்ள நட்சத்திரம் என்று சொல்லி இருக்கிறோம். இவ்வகை நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்கள் பெரும்பாலும் வாழத்தகுதியுடையதாக இருக்கும். ஆகவே... விஞ்ஞானிகள் சிவப்பு குள்ள நட்சத்திரங்களை M வகை என்று கூறிவருகின்றனர்.

TOI-6255 b

TESS- சாட்டிலைட்

டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே சாட்டிலைட் (TESS). இது விண்வெளியில் எக்ஸோப்ளானெட் வகை நட்சத்திரத்தை கண்டுப்பிடிக்க அனுப்பப்பட்ட சாட்டிலைட். இதில் இருக்கும் தொலைநோக்கிகள், டிடெக்டர் கருவிகள் மற்றும் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியால் இது விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு கோள்களையும் ஆராய்ந்து வருகிறது. ஒவ்வொரு இரண்டு வாரங்கள் சேகரித்த தரவுகளை பூமியில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு அனுப்புகிறது. அதன்படி இது கண்டுபிடித்த கோள் என்ன என்பதை பார்க்கலாம்.

TOI-6255 b

பூமியிலிருந்து சுமார் 66 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் TOI-6255 b ஒரு சூப்பர் எர்த் எக்ஸோப்ளானெட் ஆகும். இதை விஞ்ஞானிகள் 2024ல் கண்டுபிடித்தனர். இந்த கிரகம் M-வகை நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதன் நிறையானது பூமியைப்போன்று ஒன்னரை மடங்கு அதிகம். அதேபோல் இது அதன் M வகை நட்சத்திரத்தை சுற்றிமுடிக்க 0.2 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

ஒளி ஆண்டு... ஒளி ஆண்டு என்கிறீர்கள் அது புரியவில்லை என்று நினைத்தால், இப்படி எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு காரில் 60 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் இந்த கோளை சென்றடைய 741 மில்லியன் வருடங்களாகும்.

HD 118203 c

HD 118203 c

2024ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோள் நமது பூமியிலிருந்து சுமார் 301 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கிறது. நமது காரில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் 3 பில்லியன் வருடத்தில் இந்த கிரகத்திற்கு போய் சேரலாம்.

இது G வகை நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இது முழுக்க முழுக்க நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் வியாழன் கிரகத்தைப்போன்று வாயுவால் சூழப்பட்ட ஒரு கோள் ஆகும். இது உயிரினங்கள் வாழ தகுதியற்ற ஒரு கோள். இதன் நிறை 11.1 வியாழன் அளவு கொண்டது. அதன் G வகை நட்சத்திரத்தை சுற்றி முடிக்க 13.9 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது