டெக்

அசத்தலான நோக்கியா 3310 4ஜி வோல்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

அசத்தலான நோக்கியா 3310 4ஜி வோல்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

webteam

எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது சீனாவில் அதன் நோக்கியா 3310 4ஜி  வோல்ட் போன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் போன்கள் 10 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. முதல் முறைய போன் வாங்கிய பலரும் நோக்கியாவின் 1100 போன்களை தான் பயன்படுத்தி இருப்பார். பின்னர், சோனி, மோட்டரோலா  நிறுவனம் பிரபலமடைந்தது. தற்போது, எம்.ஐ, லெனோவா, ஆப்பிள், போன்ற போன்கள் மக்களிடம் அதிக பயன்பாட்டில் உள்ளது. 

நோக்கியா நிறுவனத்தின் போன்களை தற்போது எச்எம்டி க்ளோபல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நோக்கியா 3310 போனை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த நிலையில் நோக்கியா 3310 போனி 4ஜி வெர்சன் மாடல் நேற்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதனையடுத்து, நோக்கியா 3310 4ஜி போனை உலக சந்தையில் வெளியிடுவது, விலை நிலவரம் உள்ளிட்ட தகவல்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) தொழில்நுட்ப கண்காட்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 3310 4ஜி வோல்ட் சிறப்பம்சங்கள்: 

  • யன்ஓஎஸ் ( YunOS ) இயக்குதளம்
  • ஒரு சிம் கார்டு ஸ்லாட்
  • 4ஜி வோல்ட் நெட்வொர்க் 
  • எஃப்எம் ரேடியோ
  • எல்இடி பிளாஷ் 
  • 1200 எம்ஏஎச் பேட்டரி
  • 2.4 இன்ச் டிஸ்ப்ளே
  • 320 x 240 பிக்சல்
  • 2 மெகாபிக்சல் கோமர
  • வைஃபை 
  • மைக்ரோ யூஎஸ்பி
  • ப்ளூடூத் 4.0 
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • வைஃபை ஹாட்ஸ்பாட் , 
  • எம்பி 3 பிளேயர்
  • 256எம்பி மற்றும் 512எம்பி இண்டெர்னல் மெமரி கொண்டுள்ளது. 

தற்போது பிரெஷ் ப்ளூ மற்றும் டார்க் பிளாக் ஆகிய இரண்டு வண்ண மாறுபாடுகளில் நோக்கியா 3310 4ஜி போன் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல வண்ண விருப்பங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு மைக்ரோஎஸ்டி ஸ்டி கார்டூ ஸ்லாட் கொண்டுள்ளது.