டெக்

வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக்கிற்கு விற்க உதவி: வருந்தும் முன்னாள் நிர்வாகி!

வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக்கிற்கு விற்க உதவி: வருந்தும் முன்னாள் நிர்வாகி!

ச. முத்துகிருஷ்ணன்

முன்னாள் வாட்ஸ்அப் தலைமை வணிக அதிகாரியான நீரஜ் அரோரா வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக்கிற்கு விற்க உதவியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

2009-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வாட்ஸ்அப்பை 2014-ஆம் ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக்(இப்போது மெட்டா) கையகப்படுத்தியது. வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன், பயனர் தரவுகளை குழப்பி அதன் மூலம் லாபம் ஈட்டுவதாக ஃபேஸ்புக்கை முன்பு விமர்சித்திருந்தார். தற்போது முன்னாள் வாட்ஸ்அப் தலைமை வணிக அதிகாரியான நீரஜ் அரோரா, வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக்கிற்கு விற்க உதவியதற்கு வருந்துவதாகக் கூறியுள்ளார். நீரஜ் அரோரா இப்போது வாட்ஸ்அப் போட்டியாளரான HelloApp இன் நிறுவனராக உள்ளார்.

அவரது சமீபத்திய ட்விட்டர் பதிவில், இப்போது உலகின் மிகவும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக்-க்கு விற்க உதவுவதில் தனது ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டார். 2012-ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்பை வாங்க ஃபேஸ்புக் முயற்சி செய்து வந்ததாக அவர் தெரிவித்தார். முதல் வாங்குதல் சலுகையை வாட்ஸ்அப் நிராகரித்தது, ஆனால் இரண்டாவதாக தங்கள் நிறுவனம் ஏமாற்றப்பட்டதாக அரோரா கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் 2014-ல் வாட்ஸ்அப்பை இரண்டாவது முறையாக அணுகியதாக அரோரா கூறியுள்ளார். பின்னர், Zuckerberg-தலைமையிலான ஃபேஸ்புக் நிறுவனம் பல வாக்குறுதிகளை அளித்தது. அவை End to end encryption முழு ஆதரவு, விளம்பரங்கள் இல்லை (எப்போதும்), தயாரிப்பு முடிவுகளில் முழுமையான சுதந்திரம், மவுண்டன் வியூவில் சொந்த அலுவலகம் மற்றும் பல.  இந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை மீறப்பட்டுள்ளதாக அரோரா கூறியுள்ளார்.

மெட்டா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப்பில் விளம்பரங்களைக் கொண்டு வர முயற்சிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த அம்சம் தற்போது சோதனை காலத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பயனர் தரவு, விளம்பரங்கள் மற்றும் குறுக்கு-தளம் கண்காணிப்பதை வாட்ஸ்அப் விரும்பவில்லை என்று ஃபேஸ்புக்-க்கு மிகத் தெளிவாகத் தெரிவித்தோம். ஆனால், ஃபேஸ்புக் உண்மையில் வாக்குறுதிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றவில்லை.

“இன்று, வாட்ஸ்அப் ஃபேஸ்புக்கின் இரண்டாவது பெரிய தளமாகும் (இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் மெசஞ்சரை விடவும் பெரியது). ஆனால் இது நாம் நம் இதயங்களை ஊற்றி, உலகத்திற்காக உருவாக்க விரும்பிய தயாரிப்பின் நிழல். மேலும் அது ஃபேஸ்புக்கின் ஒரு பகுதியாக மாறியதற்கு நான் மட்டும் வருத்தப்படவில்லை,” என்று அரோரா கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, அனைத்து தளங்களிலும் பயனர்களுக்கு தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் மெட்டா செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் கதைகளில் நிலையை நேரடியாகப் பகிர்வது போன்ற அம்சங்களைச் சேர்த்தது. இது முக்கிய வாட்ஸ்அப் குழு எப்போதும் எதிராக உள்ளது. மேலும் மிக விரைவில் நாம் விளம்பரங்களையும் பார்க்க வாய்ப்புள்ளது.