டெக்

செய்தி தொகுப்பாளராக களமிறங்கிய ரோபோ

செய்தி தொகுப்பாளராக களமிறங்கிய ரோபோ

webteam


ஜப்பான் விஞ்ஞானி தயாரித்துள்ள எரிக்கா எனும் ரோபோ, டிவியில் செய்தி தொகுப்பாளராக பணிபுரிய உள்ளது.

ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தின் இயக்குனர் ஹிரோஷி இசிகுரோ, சோபியாவை உருவாக்கியுள்ளார். இதை உருவாக்கியதன் நோக்கம் வரவேற்பாளராக பணி புரிய செய்வதே. ஆனால் சோபியா, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த 2017ம் ஆண்டு, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதையடுத்து, எரிக்காவை நவீன தொழில்நுட்பங்களால் மேம்படுத்தி தொலைக்காட்சிகளில் செய்தி தொகுப்பாளராக பணிபுரிய வைக்க விஞ்ஞானிகள் முயற்சித்துள்ளனர். தற்போது எரிக்கா, உரையாடும் திறன், மனப்பாடம் செய்யும் திறன் கொண்டதாக உருவெடுத்துள்ளது. திறமையிலும், உருவத்திலும் மனிதர்களை போன்று அவதாரமெடுத்துள்ள எரிக்கா கை, கால், கண் இமை, கழுத்து போன்றவற்றை பேசுவதற்கு ஏற்றார்போல் அசைத்து அசத்திவருகிறது. கூடிய விரைவிலே எரிக்கா செய்தி தொகுப்பாளராக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.