Elon Musk Twitter
டெக்

‘ட்விட்டர், Space X நிறுவனங்களுக்கு புதிய சிஇஓ’ - எலான் மஸ்க் அறிவிப்பு!

Justindurai S

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (இவருக்கு சொந்தமானவைதான் டெஸ்லா கார் நிறுவனமும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மையமும்), உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கினார். ட்விட்டரை வாங்கியதுமே பல அதிரடி மாற்றங்களை செய்து வந்த அவர், சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாகும் வகையிலும் செயல்பட்டு வந்தார்.

Elon Musk

அதற்கிடையே ட்விட்டருக்கான சி.இ.ஓ. பதவி காலியான நிலையில், அதற்கான புதிய நபரை தேடும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டு வந்தார். அதன் முடிவாக தற்போது ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த அதிகாரியின் பெயரை அவர் அறிவிக்கவில்லை.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை (பெண் சிஇஓ) நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இன்னும் 6 வாரங்களில் பணியை தொடங்குவார். அதன்பின் தயாரிப்பு, மென்பொருள் மற்றும் சிஸ்டம் ஆபரேட்களை மேற்பார்வையிடும் நிர்வாகத் தலைவர் & CTO ஆக எனது பங்களிப்பு மாறும்" என்று பதிவிட்டுள்ளார்.