டெக்

தேர்தலில் இனி கண்ணுக்கு தெரியாத மையா ?

தேர்தலில் இனி கண்ணுக்கு தெரியாத மையா ?

webteam

தேர்தலில் பயன்படுத்தப்படும் அழிக்கமுடியாத மையிற்கு போட்டியாக கண்ணுக்கு தெரியாத மை தயாரிக்கப்படவுள்ளதாக ’தி இந்து’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தேர்தல் காலங்களில் மக்கள் எடுக்கும் நிழற்படங்களில் ஒன்று அவர்களின் கைவிரலில் வாக்களித்தற்காக வைக்கப்படும் மையுடன் கூடிய நிழற்படம் தான். அந்த நிழற்படுத்துடன் ‘நான் என் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன் என்ற வசனமும் இடம்பெற்றிருக்கும். இந்த நிழற்படத்தை பிரபலங்கள் மட்டுமில்லாது பொதுமக்களும் அதிக அளவில் சமூகவலைதளங்கள் பகிர்வார்கள். தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவது அழிக்க முடியாத மை. இந்த மை சில மாதங்கள் வரை நம் விரலில் இருக்கும். 

தற்போது இந்த அழிக்க முடியாத மையிற்கு போட்டியாக புதிய மை ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அது ‘கண்ணுக்கு தெரியாத மை’ (Invisible ink). இந்த புது மையை விரலில் தேய்த்தால் அதன் தடம் தெரியாது. அதை காணவேண்டும் என்றால் குறைந்த அளவு திறன் உடைய லைட்டை (புற ஊதாக் கதிர் லைட்) பயன்படுத்தவேண்டும். இந்த லைட்டை விரலின் மீது அடித்தால் இந்த மை ஆரஞ்சு நீற கோடாக ஒளிரும். இந்த புது மையை டெல்லியிலுள்ள தேசிய இயற்பியல் ஆராச்சிக்கூடம் சோதனை முயற்ச்சியாக தயாரித்துள்ளது.

இந்த மை ஃப்ளோரசன்ஸின்(flourescence) முறையில் செயல்படுகிறது. அதாவது சில பொருட்களின் மேல் புற ஊதாக் கதிர் லைட்டை (Ultra-violet light) அடித்தால் அவை ஒளிரும். ஆனால் இந்த புதிய மை ஒரு சில வகையான புற ஊதாக் கதிர் லைட்டிற்கு மட்டும் ஒளிரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையை மைசூர் வண்ணம் மற்றும் வார்னிஷ் நிறுவனத்தின் அறிவுரையின் பெரில் தயாரிக்கப்படவுள்ளது.

மைசூர் வண்ணம் மற்றும் வார்னிஷ் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டுவரும் அரசு நிறுவனம். கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் அழிக்கமுடியாத மையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கி வருகிறது. மேலும் இந்த நிறுவனம் அழியாத மையை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.