டெக்

இ-ருபி மின்னணு பணப்பரிமாற்ற முறை அறிமுகம்

இ-ருபி மின்னணு பணப்பரிமாற்ற முறை அறிமுகம்

Sinekadhara

இ-ருபி என்ற பெயரிலான புதிய மின்னணு பணப்பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ரொக்கப் பணப்பரிவர்த்தனையை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம், சேவை வழங்குவோரையும், சேவை பெறுவோரையும் மின்னணு முறையில் இணைக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அரசின் நலத்திட்டங்கள் உரியோருக்கு சென்று சேர இ-ருபி முறை வெகுவாக உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டப்படி பயனாளிகள் இணையவழியில் முன்கூட்டியே பணத்தை செலுத்தினால் அதற்கான வவுச்சர் எனப்படும் ரசீது எஸ்எம்எஸ் அல்லது க்யூ ஆர் கோடு குறியீடு வடிவில் அனுப்பப்படும். பின்னர் எந்த இடத்தில் பணம் செலுத்த தேவையிருக்கிறதோ அங்கு இந்த வவுச்சர்களை கொண்டு செலுத்தலாம். பணம் செலுத்த டெபிட், கிரெடிட் கார்டு, மொபைல் ஆப் போன்ற எதுவும் அவசியமில்லை. மொபைல் ஃபோன் கையில் இல்லாவிட்டாலும் வவுச்சர் எண் விவரம் இருந்தால்கூட பணம் செலுத்திவிட முடியும்.