போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வுக்காக மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளது மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ்.
DAD (drive against drug) என்ற பெயரில் போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறையின் மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பொது மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை துண்டுப் பிரசுரங்களையும் மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழங்கி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப போதைப்பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து மீம்ஸ்கள் மூலம் விழிப்புணர்வை மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.
DAD என்ற பெயரில் சமூக வலைதள பக்கம் உருவாக்கி அதில் மீம்ஸ்கள் மூலமாக போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: "ரஷ்ய வீரர்களுக்கு அது போதுமானதாக இல்லை" - போட்டுடைத்த உக்ரைன் அதிபர்