ராம் நரேன் அகர்வால் முகநூல்
டெக்

‘அக்னி ஏவுகணைகளின் தந்தை’ ராம் நரேன் அகர்வால் காலமானார்!

PT WEB

அக்னி ஏவுகணைகளின் தந்தை என அழைக்கப்படும் ராம் நரேன் அகர்வால், உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 84.

சில காலங்களுக்கு முன்புவரை, ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு இந்தியா, சோவியத் யூனியனையே நம்பியிருந்தது. ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள மற்ற நட்பு நாடுகளும் தயாராக இல்லாததால் ராம் நரேன் அகர்வால் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு.

ராம் நரேன் அகர்வால்

1983ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 22 ஆண்டுகள் அத்திட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், இந்தியாவிலேயே அக்னி ஏவுகணைகளை உருவாக்கி சாதனை படைத்தார். டிஆர்டிஓ ஆய்வகத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்த அகர்வால், SLV-3 ராக்கெட் வடிவமைப்பில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

விண்வெளி மற்றும் ஆராய்ச்சித்துறை இவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த ராம் நரேன் அகர்வால் ஹைதராபாத்தில் நேற்று காலமானார்.