‘ஸ்பேஸ் X’ நிறுவனர் எலான் மஸ்க் இந்தியாவின் ஊரக பகுதிகளில் பிராட்பேண்ட் சேவை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்பேஸ் X நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஸ்டார்லிங்க் மூலமாக இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்பகுதிகளில் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
முதற்கட்டமாக நிதி ஆயோக் அடையாளம் காண்கின்ற பகுதிகளில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து தங்களது பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாவும் ஸ்டார்லிங்க் இந்தியாவின் இயக்குனர் சஞ்சய் பார்கவா தெரிவித்துள்ளார்.
சுமார் 5000-க்கும் மேற்பட்ட முன்கூட்டிய ஆர்டர்களை ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இருந்து பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான டெபாசிட் தொகையாக 7,350 ரூபாயை வாடிக்கையாளர்கள் செலுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பீட்டா நிலையில் நொடிக்கு 50 முதல் 150 மெகாபிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பு இயங்கும் எனவும் ஸ்டார்லிங்க் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.