டெக்

இந்தியாவில் ஐஃபோன் 8 அறிமுகமாகும் தேதி, விலை.. தெரியுமா?

webteam

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் 8 பிளஸ் ஆகியவை இந்தியாவில் வரும் 29 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மொபைல் பிரியர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 8, ஐஃபோன் 8 பிளஸ் மாடல் மொபைல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. ஐஃபோன் 8 மாடலில் ஒஎல்இடி டிஸ்பிளே, 3டி வியூ ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 3D ஃபேஷியல் ரெக்கஃனீஷேஷன் வசதியுடன் வெளிவந்துள்ள ஐஃபோன் 8 இல் ஹோம் பட்டனிற்கு மாற்றாக ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை 64 ஆயிரம் ரூபாயாக இருக்கும் எனத் தெரிகிறது. ஐஃபோன் 10 நவம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை 89 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஐஃபோன் 7, ஐஃபோன் 7S, ஐஃபோன் 6s ஆகியவற்றின் விலை 8 ஆயிரத்து 300 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.