டெக்

மீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்... கவுன்ட் டவுன் தொடக்கம்

Rasus

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்காக, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் புறப்படுவதற்கு கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கஜகஸ்தானில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த விண்கலத்தின் அவசர வழியில் இருந்து தனி கேப்சூல் மூலம் கீழே குதித்து அதில் இருந்த வீரர்கள் உயிர் தப்பினர்.

இந்தத் தோல்வியை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, சோதனை ரீதியாக மூன்று முறை ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. அதில் வெற்றி கிடைத்துள்ளதை தொடர்ந்து, பைக்கானூர் விண்வெளி தளத்தில் இருந்து, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் மூலம், ரஷ்யாவின் ஒலேக் கோனோநென்கோ, கனடாவின் டேவிட் செயின்ட் ஜாக்குஸ், அமெரிக்காவின் மெக்கிளெயின் ஆகியோர் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு செல்லவுள்ளனர்.