birthday leave policy web
டெக்

யார் சாமி நீ.. ஊழியர்களுக்கு பிறந்தநாளில் விடுமுறை! இணையத்தை தெறிக்கவிட்ட கம்பெனி நிறுவனர்!

Rishan Vengai

பெரும்பாலான நிறுவனங்களில், ஊழியர்களுக்கு பிறந்தநாளன்று விடுமுறை கிடைப்பதே குதிரை கொம்பாகத்தான் இருக்கும்.

ஆனால் Alphanumero என்ற கார்ப்பரேட் நிறுவனமானது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், வேலை செய்யும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது மட்டுமில்லாமல், ஊழியர்களின் அன்பிற்குரியவர்களான காதலி, மனைவி, கணவன், காதலன், குழந்தைகள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் பிறந்தநாளுக்கும் விடுமுறை வழங்கும் பாலிஸியை அறிமுகப்படுத்தி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

birthday leave policy

அந்நிறுவனத்தின் நிறுவனரான அபிஜித் சக்ரபூர்த்தி, ஒருவரின் பிறந்தாள் என்றால், அன்றைய நாளில் அவர்கள் பரிசுக்கு தகுதியானவர்கள். மாறாக விடுமுறை மறுக்கப்படுவதும், எதற்கு உனக்கு விடுமுறை என்ற எதிர்வினைகள் ஆற்றுவதும் இருக்க கூடாது என்று வெளிப்படுத்தி ”யார் பாஸ் நீங்க?” என எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளார்.

வருடத்தில் 2 நாட்கள் கூடுதலாக சம்பளத்துடன் விடுமுறை..

Alphanumero என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் நிறுவனர் அபிஜித் சக்ரபூர்த்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய LinkedIn பக்கத்தில், கம்பெனியில் புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கும் “Birthday Plus One" என்ற விடுப்பு பாலிஸி குறித்த விவரங்களை பகிர்ந்திருந்தார்.

அந்த புதிய விடுமுறை பாலிஸியில், ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு வருடத்தில் இரண்டு நாட்கள் கூடுதலாக விடுமுறை கிடைக்கும். அதாவது “அவர்களின் சொந்த பிறந்த நாள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களின் பிறந்த நாள்” என இரண்டு விடுமுறை நாட்களை கூடுதலாக ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த இரண்டு நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் அவர்களின் விடுப்பு சமநிலை பாதிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

birthday leave policy

இதற்கான காரணத்தையும் அபிஜித் சக்ரபூர்த்தி பகிர்ந்துள்ளார், அவர் முன்பு ஒரு கம்பெனியில் ஊழியராக பணியாற்றியபோது, அவருடைய பிறந்தநாளில் நிறுவனர் அவருக்கு விடுமுறை கொடுக்க மறுத்துவிட்டதாக வெளிப்படுத்தினார்.

அந்த சம்பவம் குறித்து பேசியிருக்கும் அவர், “எதற்கு உனக்கு லீவ் வேண்டும் என்று நிறுவனர் கேட்டார், நான் என் பிறந்தநாள் என்று கூறினேன். அதற்கு அவர் நான் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டது போல ஒரு பார்வை பார்த்தார்” என்று தான் அனுபவித்த மோசமான சம்பத்தை பகிர்ந்து கொண்டார்.

Birthday leave policy

மேலும் ஒருவரின் பிறந்தநாளில் அவர்கள் பரிசுக்கு தகுதியானவர்களே தவிர எதிர்வினைகளுக்கு அல்ல என்று குறிப்பிட்டிருக்கும் அவர், நாம் ஒன்றாக முன்னேறும் போது பிறந்தநாள் விடுப்பின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பானது எல்லோருடைய கவனத்தையும் பெற்றுள்ளநிலையில், இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.