வியாழனின் துனைக்கோள் நாசா
டெக்

வியாழன் கிரகத்தின் ’யுரோப்பா’ நிலவை ஆய்வு செய்ய விண்ணிற்கு பறக்கும் ’கிளிப்பர்’ செயற்கைகோள்!

Jayashree A

விண்வெளி துறையில் அனேக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டாலும், இவர்களுக்கு முன்னோடியாக நாசா இருக்கிறது என்றால் அது மிகையல்ல..

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம், நீர் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக நாசா தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். அந்த ஆச்சர்யம் அடங்குவதற்குள், வியாழன் கிரகத்தை சுற்றி வரும் யுரோப்பா என்ற துனைக்கோளை ஆய்வு செய்வதற்காக அடுத்தமாதம் கிளிப்பர் என்ற செயற்கைகோள் ஒன்றை நாசா விண்ணிற்கு அனுப்புகிறது.

கிளிப்பர்

வியாழனானது பூமியைப்போன்று 1000 மடங்கு பெரியதாக இருந்தாலும் இதில் உயிரினங்கள் வாழதகுதியானது இல்லை. ஆனால், இந்த கிரகத்தைச் சுற்றி 95 நிலவு இருக்கிறது.

இதில் முக்கியமான ஒன்று யுரோப்பா என்ற நிலவு... முதன்முதலில் கலிலியோ தனது தொலைநோக்கியில் இந்த நிலவை கண்டறிந்தார். அதன்பிறகு வாயோஜர்1 ஹப்பிள் ஸ்பேஸ் என்று பல்வேறு விண்கலங்களும் தொலைநோக்கியும் இதனை ஆய்வு செய்து வந்தன.

இவர்களின் ஆய்வின் முடிவில் யுரோப்பா நிலவானது சற்று கதிர்வீச்சுடன் காணப்படுகிறது என்றும் இதன் மேற்பரப்பில் உறைந்த நிலையில் பனிக்கட்டி இருப்பதையும் அதற்கு அடியில் ஒரு பெரும் கடல் இருப்பதையும் உறுதிப்படுத்தினர்.

இதனை அடுத்து இந்த நிலவை ஆய்வு செய்வதற்காக நாசா ஆனது திட்டமிட்டது. அதன்படி அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 10ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் 6000 கிலோகிராம் எடையுள்ள கிளிப்பர் என்ற செயற்கைகோள் ஒன்றை அனுப்புகிறது.

இந்த கிளிப்பர் செயற்கைகோளானது 2030ல் யுரோப்பா நிலவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டப்படி அனைத்தும் சரியாக நடந்தால், விண்கலம் யுரோப்பா நிலவில் என்ன கண்டுபிடிக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள விஞ்ஞானிகள் ஆவலாக இருக்கின்றனர்.