டெக்

பூமியை நோக்கி பாய்ந்து வரும் சீனாவின் ’டியன்காங்-1’

பூமியை நோக்கி பாய்ந்து வரும் சீனாவின் ’டியன்காங்-1’

webteam

சீன விண்வெளி நிலையமான ’டியன்காங்-1’-ன் உடைந்த பாகங்கள் தெற்கு பசிபிக் கடலில் விழும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29- ஆம் தேதி ‘டியன்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவியது சீனா. இது சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம். 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்ட இந்த ஆய்வுக்கூடம் தனது பணிகளை 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. அதன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந் நிலையில் ‘டியன்காங்-1’ செயலற்று விட்டதாக 2016-ம் ஆண்டு சீனா அறிவித்தது.

இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் எங்கு விழும் என்று தெரியவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கடலில்தான் விழும் என ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். 

அதன்படி, தெற்கு பசிபிக் பகுதியை நோக்கி ஆய்வுக்கூட பாகங்கள் வந்து கொண்டிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வளிமண்டலத்துக்கு மேலேயே பெரும்பாலான பகுதிகள் எரிந்து அழிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பூமிக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.