சீனா ஸ்பேஸ் ஸ்டேஷன் புதிய தலைமுறை
டெக்

”வெளிநாட்டு உளவு அமைப்புகள் எங்கள் விண்வெளி ரகசியங்களை திருட முயற்சிக்கின்றன” - சீனா குற்றச்சாட்டு

விண்வெளி திட்டத்தில் கொடிகட்டி பறக்கும் நாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆரம்ப நாட்களில் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளி திட்டத்தில் ஈடுபட்டு வெற்றிகண்டது.

Jayashree A

தங்களது விண்வெளித் திட்டத்தின் ரகசியங்களை வெளிநாட்டு உளவு அமைப்புகள் திருட முயற்சிப்பதாக சீனா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

விண்வெளி திட்டத்தில் கொடிகட்டி பறக்கும் நாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆரம்ப நாட்களில் சீனா அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளி திட்டத்தில் ஈடுபட்டு வெற்றிகண்டது.

பிறகு, நாளடைவில் அநேக நாடுகள் தனித்தனியாக விண்வெளித்துறையில் தன்னிறைவைப்பெற்று வருகின்றன. இதில் இந்தியாவும் ஒன்று. ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானிகளும் போட்டி போட்டுக்கொண்டு, விண்வெளி ஆராய்ச்சியில் கால்பதித்து வருகின்றனர். இதில் தனியார் நிறுவனங்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் போன்ற நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு விண்வெளி துறையில் சாதனைப்படைத்து வருகின்றன. இது இப்படியிருக்க...

சந்திரயான் 3

பூமியில் அனைத்து நாட்டினரும், எல்லைப்பகுதிகளுக்காக அண்டை நாட்டுடன் சண்டையிட்டு வரும் நிலையில், பூமியைத்தாண்டி விண்வெளித்துறையிலும் வருங்காலத்தில் பிரச்னை வரலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தற்பொழுது சீனா ஒரு பிரச்னையைக் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் ( Ministry of State Security) வெளிநாட்டு உளவு அமைப்பினர் தங்கள் நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளிடமிருந்து தகவல்களைத் திருட முயற்சிப்பதாக எச்சரித்துள்ளது. மேலும், அது தனது எதிர் உளவுத்துறை முயற்சிகளை முடுக்கிவிட்டதாகவும் கூறியுள்ளது.

வெளிநாட்டில் உள்ள உளவு முகவர்கள் சமீபத்தில், துல்லியமான உயர் ரக ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி , சீனாவின் கண்காணிப்பு மற்றும் தகவல்களைத் திருடுகின்றனர் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் ( MSS) எந்த நாடுகளின் பெயரையும் குறிப்பிடாமல் குற்றம் சாட்டியுள்ளது.

”விண்வெளி பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் ’முக்கியமான தூண் மற்றும் முக்கிய அங்கம்’ என்றும், நாட்டின் விண்வெளி சொத்துக்கள், உரிமைகள் மற்றும் சுற்றுப்பாதை சுற்றுச்சூழலை இயற்கை நிலைமைகள் மற்றும் மனித நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது அவசியம்” என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

சமீபத்தில் சில மேற்கத்திய நாடுகள் விண்வெளி படைகளை உருவாக்குவதன் மூலம் விண்வெளி தாக்குதல் திறன்களை உருவாக்கியுள்ளன. விண்வெளி துறையில் சீனாவை அவர்கள் முக்கிய போட்டியாளராக அவர்கள் கருதுகின்றனர்.