சர்வதேச விண்வெளி நிலையம் நாசா
டெக்

சென்னை மக்கள் மே 8 முதல் மே 23 வரை, இரவு வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி நிலையத்தை காணலாம்!

Jayashree A

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் மே 8 முதல் மே 23 வரை பார்க்கலாம் என்று நாசா தெரிவித்த நிலையில் சென்னையில் இன்று இரவு சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்கமுடியும்.

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது என்ன?

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் நம் புவியின் சுற்றுப்பாதையில் (low-earth orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம். இதனை நாசாவுடன் பல நாடுகள் ஒன்றாக இணைந்து உருவாக்கி உள்ளது. இதனை International Space Station (ISS) என்பர். இதில் விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையம்

மேலும், இதில் இருந்தபடி விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சர்வதேச விமானக் குழுக்கள், ஏவுகணை வாகனங்கள், உலகளவில் விநியோகிக்கப்பட்ட ஏவுதல் மற்றும் விமானச் செயல்பாடுகள், பயிற்சி, பொறியியல் மற்றும் மேம்பாட்டு வசதிகள், தகவல் தொடர்பு, நெட்வொர்க்குகள் மற்றும் சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி சமூகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை இது கண்காணிக்கிறது.

இந்த Space Station-க்கு மக்களாகிய நாம் செல்லமுடியாவிட்டாலும், குறைந்தபட்சம் இதை கண்ணாலாவது பார்ப்போமா... என்று நினைக்கும் அறிவியல் ஆர்வலர்களுக்கு அடித்துள்ளது ஜாக்பாட்!

ஆம்.... மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய Space Station ஐ சென்னையில் இருப்பவர்கள் மே 8ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை குறிப்பிட்ட திசையில் வானத்தில் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று நாசா செய்தி வெளியிட்டு இருக்கிறது

அதாவது இன்று இரவு 7.09 மணியில் இருந்து வானத்தில் 7 நிமிடங்கள் வரை சென்னைக்கு மிக அருகில் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நம் கண்களால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.

தேதிவாரியாக நாசா வெளியிட்ட அட்டவணை