டெக்

சந்திரயான் II இறுதிக்கட்டப் பணியில் இஸ்ரோ ! வெளியானது லேண்டர், ரோவர் புகைப்படங்கள்

சந்திரயான் II இறுதிக்கட்டப் பணியில் இஸ்ரோ ! வெளியானது லேண்டர், ரோவர் புகைப்படங்கள்

இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது.
இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள
சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திரயான்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திரயான்-II விண்கலத்தை அனுப்ப
திட்டமிட்டது. சந்திரயான்-II விண்கலம் ஜூலை 9 முதல் 16 ஆம் தேதிக்குள்ள விண்ணில் செலுத்த திட்டமிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில் சந்திரயான் - II இல் செல்லவிருக்கும் லேண்டர், ரோவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் லேண்டர் கருவிக்கு விக்ரம் என்றும் ரோவர் கருவிக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சந்திரயான்-II விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்கள் அனுப்பப்படவுள்ளன. அவை ஆர்பிடர்(Orbiter), லேண்டர் மற்றும் ரோவர்  இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-IIIயின் மூலம் ஏவப்படும். லண்டரினுள் ரோவர் பொருத்தப்படவுள்ளது. சந்திரயான்-II பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். அதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லேண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது.

நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை நிகழ்த்திய பெரிய சாதனை எனில் அது சந்திரயான் -1 திட்டம் என்று கூறலாம்.
நிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்திய போது உலகமே இந்தியாவைத் திரும்பிப்
பார்த்தது. மிகவும் குறைந்த செலவில், நிறைய அறிவியல் கணிப்புகளை வைத்து சந்திரயான்- 1 செயல் திட்டம் வெற்றிகரமாக
முடிக்கப்பட்டது.இந்நிலையில் சந்திரயான், நிலவில் நீர்வழித் தடங்கள் தெரிவதாக கூறியது. இந்தக் கண்டுபிடிப்பு இதுவரை எந்த விண்வெளிஆராய்ச்சி நிறுவனங்களும் செய்யாதது ஆகும். அதன்பின் சில நாள்களில் இந்தியாவின் கண்டுபிடிப்பு உண்மைதான் என்றுஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்தது.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் II விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விண்கலம்
மட்டுமின்றி சிறிய அளவிலான ரோபோ போன்ற ரோவர் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த சந்திரயான் -2 ரோவர் நிலவின்
மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். இதற்கு முன் 2013- இல் கடைசியாக நிலவுக்கு சீனா இது
போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது.

லேண்ட்ர் ரோவர் பணிகள் என்ன ?

சந்திரயான்  1 கருவிகள் மூலமாகக் கிடைத்த விவரங்களை ஆய்வு செய்வதற்காக, நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்ட்ர் ரோவர் என்ற தானாக இயங்கும் கருவி அனுப்பப்பட உள்ளது. சுமார் 20 கிலோ எடை கொண்ட இந்தக் கருவியில் 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவி சூரியசக்தி மூலம் இயங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.லேண்டர் ரோவர் கருவியை நிலவில் எந்த இடத்தில் இறங்கச் செய்வது என்று இப்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

எவ்வளவு எடை ?

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திரயான் -2 விண்கலம் 3,290 கிலோ
எடை கொண்டதாக இருக்கும். இதில் ரஷ்யாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது.
மேலும், நவீன ரக முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்லாம், திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில் பூமியில்
இருந்து புறப்பட்ட 14-ஆவது நாளில், நிலவில் தனது பணியை சந்திரயான்- 2 தொடங்கும்.