நிலவிற்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் முதன்முறையாக பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது பூமியின் சுற்று வட்டப் பாதையிலிருந்து மெதுவாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த விண்கலம் நேற்று மாலை பூமியை படம் எடுத்துள்ளது. இந்தப் படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பூமியின் படம். இது சந்திரயானின் எல்.ஐ4 கேமராவில் நேற்று மாலை 5.34 மணிக்கு படம் பிடிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: