டெக்

நிலவில் புதிய வாயுவை கண்டறிந்த சந்திரயான் 2

நிலவில் புதிய வாயுவை கண்டறிந்த சந்திரயான் 2

jagadeesh

நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பதை சந்திரயான் 2 விண்கலம் உறுதிபடுத்தியுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2வின் விக்ரம் லேண்டர் செயலிழந்தாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டர் கலனில் உள்ள சேஸ் 2 என்ற கருவி உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக் கூடியது என்றும், பூமியில் அரிதாக காணப்படும் வாயுவில் ஆர்கான் 40தும் ஒன்று என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.