டெக்

சிசேரியன் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சிசேரியன் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

webteam

சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால் பிற்காலத்தில் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு புதிய ஆய்வு முடிவு கூறுகிறது.

இஸ்ரேலின் பென் கூரியன் பலகலைக்கழக பேராசிரியர் எய்யால் ஷெய்னெர் தனது ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 18 வயதுக்குட்பட்டவர்களில், நாளமில்ல சுரப்பிகள் மற்றும் வளர்சிதை மாற்றமடைதலில், பிரசவ தேதிக்கு முன்னதாக சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளதாக கண்டறிந்துள்ளார்.

மேலும் பென் கூரியனின் ஆய்வாளர்கள், சிசேரியன் மூலம் பிறந்த 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு முதல் நிலை நீரிழிவு நோய் அதிகமாக உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

பிரசவ தேதிக்கு இரண்டு வாரங்கள் முன்பு அல்லது அதற்கு முன்னதாக சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தால், குழந்தை வளரும் போது நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் அவர்கள் இளம் வயதில் அகால மரணமடைய வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் வெளியாகும் ’அமெரிக்கன் ஜேர்னர்ல் ஆஃப் அப்ஸ்டெட்ரிக்ஸ் அண்ட் கயனகாலஜி’ பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.