பட்ஜெட் 2024 - 25 நிர்மலா சீத்தாராமன்
டெக்

பட்ஜெட் 2024-25| செல்போன் உள்ளிட்ட இந்த பொருட்களின் விலை குறையப் போகிறது - இதெல்லாம் விலை உயர்கிறது!

Jayashree A

2024-2025 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு சுங்கவரியை 6 % மாக குறைத்ததை அடுத்து, மொபைல் போன்கள் சார்ஜர்கள் மீதான சுங்கவரிய 20 % லிருந்து 15 % குறைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இதனால் மொபைல் போன்களின் விலையானது குறைவதற்கு வழிவகுக்கும்.

மேலும், "கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகரிப்பு மற்றும் மொபைல் போன்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிப்புடன், இந்திய மொபைல் துறை முதிர்ச்சியடைந்துள்ளது.

நுகர்வோர் நலன் கருதி, மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏ மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரியை (பிசிடி) 15 சதவீதமாக குறைக்க முன்மொழிகிறேன்” என்று மக்களவையில் நிதியமைச்சர் கூறினார்.

மொத்தத்தில், மத்திய அரசு 2024 பட்ஜெட்டில் மொபைல் போன், மொபைல் பிசிபிஏ மற்றும் மொபைல் சார்ஜர்களுக்கான அடிப்படை சுங்க வரியை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது. இதில் பேட்டரி கவர்கள், மெயின் லென்ஸ்கள், பின் கவர்கள், ஆண்டெனாக்கள், சிம் சாக்கெட்டுகள் மற்றும் பிற உலோக மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகள் போன்றவையும் அடங்கும்.

மற்ற விலை குறையும் பொருட்கள்

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மொபைல்ஃபோன், சார்ஜர், சூரிய மின் உபகரண பாகங்கள், உயிர்காக்கும் மருந்துகளில் புற்றுநோய் மருந்துகள் (மேலும் 3), கடல் உணவு வகைகள் மற்றும் தோல் பொருட்கள். விண்வெளி பாதுகாப்பு துறையில் இன்றியமையாத 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஃபெரோநிக்கல், ப்ளிஸ்டர், காப்பர், ஆகிய கனிமங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்படுகிறது. தோல் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இறால் மற்றும் மீன் தீவனத்திற்கான சுங்க வரி 5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விலை ஏறும் பொருட்கள்

அமோனியம் நைட்ரேட், மீதான சுங்கவரியானது 10 % லிருந்து 25 % வும் பிளாஸ்டிக் பொருட்கள் 25%, சில தொலைத்தொடர்பு உபகரணங்கள், 10% லிருந்து 15% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.