டெக்

சிக்ஸர் அடித்த பிஎஸ்என்எல்: 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்புகளும்!

webteam

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ”பிஎஸ்என்எல் சிக்ஸர்” அல்லது ”666” என்ற புதிய ப்ளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில், BSNL Sixer அல்லது 666 என்ற புதிய ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது பிஎஸ்என்எல். இந்த ப்ளான் அனைத்து பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, பிஎஸ்என்எல் சௌக்கா 444 என்ற திட்டத்தின் கீழ் தினமும் 4 ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கு வழங்கியதை தொடர்ந்து, தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய ப்ளானில் (BSNL sixer) தினமும் வரம்பில்லாத உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் போன்றவற்றுடன் ஒரு நாளுக்கு, 2 ஜிபி டேட்டா மற்றும் அதன் பிறகு தினசரி பயன்பாட்டிற்கு வேகம் 80Kbps என்ற அளவில் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவில் சலுகைகளுக்கு இணையாக, தன் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பிஎஸ்என்எல் சலுகைகளை வெளியிட்டு வருகிறது. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான வோடஃபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகியவையும் குறிப்பிடத்தக்க சலுகைகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.