டெக்

கிராமப்புறங்களில் 25,000 வை-ஃபை ஹாட்ஸ்பாட்ஸ் - பி.எஸ்.என்.எல் திட்டம்

கிராமப்புறங்களில் 25,000 வை-ஃபை ஹாட்ஸ்பாட்ஸ் - பி.எஸ்.என்.எல் திட்டம்

Rasus

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், அடுத்த ஆறு மாதங்களுக்குள் கிராமப்புற பகுதிகளில் 25,000 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சேவை வழங்கல் நிதியுதவி அமைப்பின் உதவியுடன், ரூ.940 கோடி மத்திய அரசின் செலவில் நாடு முழுவதும் இண்டர்நெட் வசதிகளை விரிவுபடுத்தவும் பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது. இது நகரத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் வளர்ச்சி வேறுபாடுகளை சமன்படுத்தும் என நம்புவதாக பி.எஸ்.என்.எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 25,000 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், டிசம்பர் 2018-க்குள் இந்த பணிகள் நிறைவடையும் எனவும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது. 

சந்தைப் பங்களிப்பை வருகிற 12 மாதத்திற்குள் 11 சதவிகிதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.