bsnl web
டெக்

BSNL போட்ட மெகா பிளான்.. அதிர்ச்சியில் Airtel, Jio.. இனி BSNL காலம்தான்!

தனியார் டெலகாம் நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை கொண்டுவந்த BSNL-ன் ஐடியா அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

யுவபுருஷ்

பிரபல தனியார் நிறுவனங்களான ஏர்டல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் கட்டணங்களை உயர்த்தின. 11 முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டதால், பயனர்கள் வெகுண்டெழுந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, யாருமே கொடுக்க முடியாத அளவுக்கு மலிவு விலையில் பல சேவைகளை வழங்கி வருகிறது பொதுத்துறை நிறுவனமான BSNL. இதனால், லட்சக்கணக்கானவர்களின் பார்வை BSNL பக்கம் திரும்பியது. ஆயிரக்கணக்கானவர்கள் airtel, jio மற்றும் vi போன்ற நெட்வொர்க்குகளில் இருந்து BSNLக்கு தாவினர்.

இப்படியாக இருக்க 4ஜி சேவையை வழங்க துவங்கியதோடு, 5ஜி சேவையை வழங்க முனைப்புக்காட்டி வருகிறது BSNL. ஏற்கனவே பலரும் BSNL பக்கம் திரும்பி வரும் நிலையில், மலிவு விலையில் புதுப்புது Offerகளை அள்ளித்தூவி வருகிறது. அதன்படி, வெறும் 91 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால், நீண்ட நாட்களுக்கு பயன்பெறும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது BSNL.

புதிய ஆஃபர் என்ன?

ஆம், இந்த 91 ரூபாய் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்பவர்களுக்கு 60 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 15 பைசா, ஒரு MB டேட்டாவுக்கு 1 பைசா, ஒரு மெச்சேஜிற்கு 25 பைசா என கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, குறைந்த செலவில் ரீச்சார்ஜ் செய்து அதிக நாட்களுக்கு சிம் கார்டை active ஆக வைத்திருக்க நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்யலாம். டேட்டா, அழைப்புகளுக்கு vochers, data add on போன்ற திட்டங்களை மலிவு விலையில் ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இதேபோல், 107 ரூபாய்க்கான prepaid திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்தால் 35 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. 3 ஜிபி டேட்டா, 200 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால்ஸ் வசதிகள் கிடைக்கின்றன. மிகக்குறைந்த விலையில் யாருமே கொடுக்க முடியாத அளவுக்கு bsnl கொண்டுவந்துள்ள இதுபோன்று திட்டங்கள், ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் கவனத்தையும் திருப்பியுள்ளது.