பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் web
டெக்

'All in One' - உச்சம்பெற்ற மாத ரீசார்ஜ் கட்டணங்கள்.. BSNL அறிமுகப்படுத்திய அட்டகாசமான புதிய திட்டம்!

Rishan Vengai

ஒரு கட்டத்தில் ‘விலையில்லா சிம்கார்டுகள் விற்பனை, ஒரு மாதம் நெட் ரீசார்ஜுடன் ஃப்ரீ சிம்கார்டுகள் மற்றும் சிம் வாங்கினாலே ஃப்ரீ கால் மற்றும் மாதம்/ 1 ஜிபி நெட் வசதி’ என வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா முதலிய டெலிகாம் ஆப்ரேட்டர் நிறுவனங்கள், தற்போது உங்களுடைய சிம்மிற்கு வெளியிலிருந்து போன்கால் வரவேண்டும் என்றால் கூட அதற்கு தனியாக நீங்கள் ரீசார்ஜ் செய்யவேண்டும் என்ற நிபந்தனை கட்டண விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

Airtel | Jio | Vodafone Idea

எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட காலசூழலில் மாதாந்திரம் கால் மற்றும் நெட்வொர்க் ரீசார்ஜ் செய்யவேண்டுமென்பது மிடில்கிளாஸ் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் அத்தியாவசியமாகி விட்டது. இத்தகைய சூழலில் மொபைல் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களின் விலையேற்றம் என்பது அனைத்துவிதமான மக்களையும் பாதித்துள்ளது.

இந்நிலையில்தான் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய 395 நாள் திட்டத்தை பல்வேறு இந்திய மாநிலங்களில் BSNL அறிமுகப்படுத்துகிறது.

395 நாள் திட்டத்தை அறிமுகப்படுத்திய BSNL!

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா முதலிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நடப்பு ஜூலை மாதத்தில் அனைத்துவிதமான கட்டணத்தையும் உயர்த்தி மாற்றியமைத்தன. மாதாந்திரம் ஒரு ஜிபி நெட்வொர்க் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால் கூட 265 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இத்தகைய சூழலில் தான் BSNL வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பான சலுகைகளில் ஒன்றாக 395 நாட்களுக்கு ஒரு விரிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ. 2399/ 395 நாள் திட்டம்:

₹2,399 விலையில் 395 நாட்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த திட்டம், நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அதிவேக 4G டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற வாய்ஸ்கால் அழைப்புகளை வழங்குகிறது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு இவை மாதத்திற்கு தோராயமாக ₹200 செலவு என்ற வகையில் அமைந்துள்ளது.

கூடுதலாக, இந்த திட்டமானது நாடு தழுவிய இலவச ரோமிங்கை உள்ளடக்கியது மற்றும் Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games மற்றும் Gameon Astrotell போன்ற சேவைகளையும் வழங்குகிறது.

உயர்த்தப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு ரீசார்ஜ்கள்..

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் முதலிய ஆப்ரேட்டர்கள் சமீபத்தில் பல திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளன, இது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களை அதிகளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏர்டெல்:

* 28 நாட்களுக்கு 1ஜிபி/நாள் திட்டம், தற்போது ₹265-ல் இருந்து ₹299 விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* 28 நாட்களுக்கு 1.5ஜிபி/நாள் திட்டம், ₹299-ல் இருந்து ₹349 ஆக அதிகரித்துள்ளது.

*28 நாட்களுக்கு 2ஜிபி/நாள் திட்டம், ₹359-லிருந்து ₹409 ஆக அதிகரித்துள்ளது.

*84 நாட்களுக்கு 1.5ஜிபி/நாள் திட்டம் ₹719-லிருந்து ₹859 ஆக மாறியுள்ளது மற்றும் 84 நாட்களுக்கு 2ஜிபி/நாள் திட்டம் ₹839-லிருந்து ₹979 ஆக உயர்ந்துள்ளது.

* 365 நாட்களுக்கு 2.5ஜிபி/நாள் திட்டம் ₹2,999 ஆக இருந்தது, தற்போது ₹3,599 ஆக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமம் - Jio

ஜியோ:

* ஜியோ நிறுவனத்தின் 2 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள், முன்பு ₹1,559 மற்றும் ₹2,999 விலையில் இருந்தது, தற்போது ₹1,899 மற்றும் ₹3,599 ஆக உயர்ந்துள்ளது.

* 28 நாட்களுக்கு 2ஜிபி/நாள் திட்டம், இப்போது ₹299ல் இருந்து ₹349 ஆகவும், 28 நாட்களுக்கு 1.5ஜிபி/நாள் திட்டம் ₹239ல் இருந்து ₹299 ஆகவும் உயர்ந்துள்ளது. 28 நாட்களுக்கு 3ஜிபி/நாள் திட்டம் மாறாமல் ₹449 ஆக நீடிக்கிறது.