ஒரு கட்டத்தில் ‘விலையில்லா சிம்கார்டுகள் விற்பனை, ஒரு மாதம் நெட் ரீசார்ஜுடன் ஃப்ரீ சிம்கார்டுகள் மற்றும் சிம் வாங்கினாலே ஃப்ரீ கால் மற்றும் மாதம்/1ஜிபி நெட் வசதி’ என வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா முதலிய டெலிகாம் ஆப்ரேட்டர் நிறுவனங்கள், சமீபத்தில் தங்களுடைய கட்டணங்களில் 15% வரை விலை உயர்த்தியுள்ளன.
திடீர் நெட்வொர்க் ரீசார்ஜ் கட்டண விலை அதிகரிப்பால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் BSNL-ல் இருக்கும் மலிவுவிலை ரீசார்ஜ் திட்டங்களில் ஈர்க்கப்பட்டு, தங்களுடைய பழைய நெட்வொர்க் ஆப்ரேட்டர்களில் இருந்து BSNL-க்கு மாறிவருகின்றனர்.
இந்நிலையில் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு ஆபரேட்டரான BSNL-ம் நிலைமையைப் பயன்படுத்தி, அதிக சந்தாதாரர்களை ஈர்ப்பதற்காக அதன் 4G வெளியீட்டை விரைவுபடுத்திவருகிறது.
பி.எஸ்.என்.எல் உள்ளே வந்ததால் மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துவிடக்கூடாது என சில மலிவுவிலை ஆஃபர்களை அறிவித்துவருகின்றன.
ஆனால் போட்டியை நிறுத்தாத BSNL நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது. அதன் ஒரு நீட்சியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ரீசார்ஜ் ஆனது, 3 மாதங்களுக்கு மிகக்குறைவான திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் BSNL வாடிக்கையாளராக இருந்தால் புதிய ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தால் நீங்கள் அதிகம் பயனடைவீர்கள்..
BSNL அறிமுகப்படுத்தியிருக்கும் ரீசார்ஜ் திட்டமானது, ரூ.599 விலையில் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களைப் பெறுவார்கள். டேட்டாவைப் பொறுத்தவரை, இந்த ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு ரூ.7.13 விலை மட்டுமே. இது நாட்டிலேயே மிகவும் மலிவு விலையில் 3ஜிபி 4ஜி டேட்டா ரீசார்ஜ் திட்டமாகும்.
அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு இனிய செய்தியாக, இந்த ரீசார்ஜை BSNL வாடிக்கையாளர்கள் ’BSNL Selfcare’ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது, கூடுதலாக 3GB 4G டேட்டாவை வழங்குகிறது.