Boult நிறுவனம் தன் புது பிரிமியம் மாடலான Z40 ultraவை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு மாத காலம் அந்த மாடலை பயன்படுத்தியிருக்கும் சூழலில் அதன் மீதான விமர்சன பார்வை பதிவு செய்கிறோம்.
32dB ANC
Dual Device Pairing
100Hrs Playtime without ANC
ZEN™ Quad Mic ENC
Bluetooth 5.3
45ms Ultra Low Latency
IPX5 Water Resistant
Black, Metallic, Beige
HIFI, Rock, Bass Boost
2000ரூபாய்க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், லுக் & ஃபீல் அடிப்படையில் சிறப்பானதொரு TWS ஹெட்செட் தரும் அனுபவத்தை இந்த மாடல் நமக்குத் தருகிறது. எங்களின் ரிவ்யூவிற்கு BEIGE நிற மாடல் வந்திருந்தது. ரப்பர் ஃபினிஷ் கேஸ், கோல்டன் ஸ்டிரிப் லைன் என ப்ரீமியம் ஃபீலை கேஸில் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். பில்ட் குவாலிட்டியும் சிறப்பாகவே இருக்கிறது. டைப் சி போர்ட் அதிவேக சார்ஜிங் வசதிக்காக தரப்பட்டிருக்கிறது. கேஸில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்பதைக் குறிக்கும் விதமாக நான்கு LED லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. ANC ஆஃப் மோடில் தாராளமாக இரண்டு மூன்று நாட்களுக்கு இதை நாம் பயன்படுத்த முடிகிறது.
Equalizerல் மூன்று விதமான மோடு தரப்பட்டிருக்கின்றன. HIFI, Rock, Bass Boost . இந்த மூன்று மோடுகளையும் வலது பக்க ஹெட்செட்டை நான்கு முறை tap செய்வதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம். இந்த விலையில் சிறப்பான bass என்றால் அது நிச்சயம் z40 ultra தான்.
45ms லோ லேட்டன்ஸி கேமிங் மோடுக்கென தரப்பட்டிருக்கிறது. நான்கு முறை இடது பக்க ஹெட்செட்டை tap செய்வதன் மூலம் இதனை ஆக்டிவேட் செய்ய முடியும். கேமிங் , வீடியோக்களுக்கு இந்த வசதி சிறப்பானதாக இருக்கிறது.
ப்ளூடூத் 5.3 வெர்சன் தரப்பட்டிருந்தாலும், பெட்ரூமில் இருந்து கிச்சனுக்கு சென்றாலே சில சமயங்களில் disconnected என வந்துவிடுகிறது. dual device pairing பக்காவக வொர்க் ஆகிறது.
Active Noise Cancellation வசதியுடன் வெளியாகியிருக்கும் பட்ஜெட் TWSகளில் ஒன்று Z40 ultra. வலது பக்க ஹெட்செட்டை tap & HOLD செய்வதன் மூலம் இந்த மோடை நம்மால் ஆக்ட்டிவேட் செய்ய முடியும். ஆனால், ANC இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
ஆனால், எல்லாமே சிறப்பாக இருந்தும் செயலி வேண்டாம் என ஏன் போல்ட் நிறுவனம் முடிவு செய்தது என தெரியவில்லை. பாடலை பாஸ் செய்ய சிங்கிள் tap, அடுத்த பாடலுக்கு டபுள் tap, ஒலியை உயர்த்த வலது பக்க ஹெட்செட்டை மூன்று tap, ஒலியைக் குறைக்க இடது பக்க ஹெட்செட்டை மூன்று tap, ANC ON/OFF செய்ய tap & hold, Equalizer மோடுக்கு நான்கு முறை tap என இதை மனப்பாடம் செய்வதற்கே நமக்குத் தனி மூளை வேண்டும் போல. ஒரு செயலி கொடுத்திருக்கலாமே மோல்ட். அதிலும் automated voice ON சொல்கிறதா இல்லை OFF சொல்கிறா என்பதைக்கூட சமயங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை.
நல்ல டிசைன்
comfort
சிறப்பான ஒலித்தரம்
டூயல் டிவைஸ் கனெக்ட்
ANC இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
இந்த விலையில் ஒரு சிறப்பான கேட்கும் அனுபவத்தை நிச்சயம் இந்த போல்ட் z 40 ultra ஹெட்செட் உங்களுக்கு வழங்கும்.
1999