டெக்

பொலிவியா: பிள்ளைகளுக்காக செல்போனை பயன்படுத்த கற்றுக்கொள்ளும் பெற்றோர்கள்

பொலிவியா: பிள்ளைகளுக்காக செல்போனை பயன்படுத்த கற்றுக்கொள்ளும் பெற்றோர்கள்

Sinekadhara

பொலிவியா நாட்டில் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செல்போனை பயன்படுத்த கற்றுக்கொண்டு வருகின்றனர்.  

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவ, மாணவியருக்கு நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடந்து வருகின்றன. தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்நாட்டில் பல பெற்றோருக்கு மொபைல் ஃபோன்களை கையாள தெரியாததால் தங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் கல்வி கற்க உதவ முடியாத நிலை உள்ளது.

இதனால் அந்தப் பெற்றோருக்கு மொபைல் ஃபோனை எப்படி பயன்படுத்துவது என அந்நாட்டில் உள்ள பொதுநல அமைப்பு ஒன்று கற்றுத்தந்து வருகிறது. இதனால் வயதானவர்களையும் ஒரு விதத்தில் மாணவராக்கி விட்டது கொரோனா.