blue origin  ட்விட்டர்
டெக்

இனி விடுமுறையில் விண்வெளிக்கு பயணிக்கலாம்... Blue origin விண்வெளி பயணத்தில் இந்தியர்களுக்கு இடம்!

Jayashree A

விடுமுறைக்கு மலைப்பிரதேசம், குளிர்பிரதேசம், பனிபிரதேசம் என்று உலகத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வந்து போரடித்துவிட்டதா...? கவலை வேண்டாம், கையில் பணமிருந்தால் போதும், விடுமுறைக்கு பூமியைத்தாண்டி விண்வெளிக்கு கூட சென்று வரலாம்.!

விண்வெளி

அமெரிக்காவின் SERA மற்றும் blue origin விண்வெளி பயணத்தில் இனி இந்தியர்களும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் அராய்சி நிறுவனமான SERA மற்றும் blue orign நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் முயற்சியில் இந்தியாவையும் இணைத்துக்கொண்டது. இந்த அறிவிப்பானது நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன்படி விண்வெளி திட்டத்தில் இந்தியர்களுக்கென்று ஆறு இருக்கைகளை அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் விண்வெளி திட்டமானது ஜனநாயகப்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.

Space tourism

2000 ஆண்டில் Space tourisium என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். இவர் அதற்கு அடுத்தகட்டமாக blue origin NS-25 என்ற விண்கலத்தை உருவாக்கி, மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

blue origin

அதன்படி, blue origin 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் NS-22 என்ற ஒரு விண்கலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்த சமயத்தில் அதில் ஒரு சிக்கல் வந்தது. ஆகையால் மனிதர்களை தவிர்த்து, வெறும் பொருட்களை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த பயணம் தடைப்பட்ட காரணத்தால் அமெரிக்க அரசாங்கம் பல தீவிர விசாரணைக்கு பிறகு NS-25 விண்கலத்தை தற்பொழுது அனுமதித்து இருக்கிறது.

20 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லலாம்!

பூமியின் வளிமண்டலத்தை அடுத்து இருக்கும் கார்மென் எல்லையைக் கடந்தால், விண்வெளி. அவ்வளவுதான். இந்த விண்வெளி பயணத்திற்கு அதிகபட்சமாக இருபது நிமிடங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கார்மென் எல்லையைக் கடந்து ஒரு 100 கிலோமீட்டர் உயரத்தில் பயணிகள் 4 நிமிடம் மிதக்கும் அனுபவத்தை பெறலாம். (அதாவது எடையில்லாத ஒரு நிலை) 4 நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த விண்கலம் பாராசூட் மூலம் தரையிறக்கப்படும்.

கார்மென் எல்லை

ஏவக்கூடிய ராக்கெட்டும், பாராசூட் மூலம் திரும்பிவரும் விண்கலமும் மறுபயன்பாட்டிற்கு பயன்படும் என்கின்றனர். கார்மென் பகுதியை தாண்டி 80 கிலோ மீட்டர் பயணித்தாலே விண்வெளி என்கிறது நாசா. ஆனால் மற்ற நாடுகள் கார்மென் பகுதியிலிருந்து 100 கிமீ தாண்டினால்தான் விண்வெளி என்கிறது.

இது இப்படி இருக்க... blue origin விண்வெளிப் பயணத்திட்டத்தில் ஒரு கூட்டாளி நாடாக இந்தியாவையும் அறிவித்து இருக்கிறது அந்நிறுவனம். இதில் பயணப்படும் இந்திய குடிமக்களுக்கான இருக்கை வழங்குவதை SERA பார்த்துக்கொள்ளும்.

இந்தப்பயணத்தில் பூமியிலிருந்து 100 கி,மீ உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லையான கர்மன் கோட்டிற்கு அப்பால் 11 நிமிட பயணத்தில் பயணிகளை blue origin New shepard அழைத்துச்செல்லும். விண்வெளி பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆறு நபர்களில் இந்தியர்களும் அடங்குவர்.

2.50 டாலர் கட்டணத்தை செலுத்தி இந்தத்திட்டத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொது வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்பிறகு அவர்கள் விண்வெளி செல்வதற்கான உடல் தேர்வு தகுதி தேர்வுக்கு தயாரான பிறகு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. விண்வெளிக்கு செல்வதற்கு ஒரு நபருக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டால், கிட்டத்தட்ட1,00,000 லிருந்து 2,00,000 டாலர் வரை ஆகும் என்ற பேச்சு அடிபடுகிறது.